அனர்த்தம் ஏற்படும் போது உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்.
மன்னார் மாவட்டம் கடந்த வருடம் வெள்ளம் மற்றும் வரட்சியினால் மாரி மாரி பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்ற நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராம மக்களுக்கு வரட்சிக்காண நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வரட்சியினால் பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக வரட்சி நிவாரண செயல் திட்டத்தினுடாக உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (08-02-2012) சிலாபத்துரை ம.வி பாடசாலையில் இடம் பெற்ற
போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,,,,
நாங்கள் கடந்த காலங்களில் வெள்ளம்ääவரட்சி ஆகிய இரண்டு அனர்த்தங்களினாலும் பாதீப்புகளுக்கு உள்ளாகி வருகின்றோம்.இந்த வகையில் கடந்த வருடம் எமது மாவட்டம் கடுமையான வரட்சிக்கு உள்ளாகியது.
அந்த ரீதியில் பொதுவாக விவசாய செய்கைக்கு அப்பால் குடி நீருக்கு கஸ்டப்படும் மக்கள் கருத்தில் கொள்ளப்பட்டார்கள். நீர் பற்றாக்குறையினால் ஏனைய தொழிலை இழந்தவர்களும் கவனத்தில் கொள்ளப்பட்டார்கள்.
அந்த வகையிலே முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராம மக்கள் தெரிவு செய்யப்பட்டு வரட்சிக்காண இந்த நிவாரணம் வழங்கப்படுகின்றது.
ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்தது போல் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நீங்கள் நினைத்தவாறு செலவு செய்யாது இந்த பணத்தை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
இதற்காண ஆலோசனைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை நீங்கள் தகுந்த விதத்தில் பயண்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் சுயதொழிலுக்காக இந்த பணத்தை செலவு செய்ய வேண்டும்.
இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போது உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
இது மட்டுமின்ற ஒவ்வெரு கிராமத்திற்கும் 2 ஆயிரம் லீற்றர் நீர் கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பொது நலத்துடன் பயண்படுத்த வேண்டும்.குறித்த கிராமங்களின் பெரியவர்கள் வழங்கப்படும் இந்த பொருட்களில் பாதுகாப்புக்களை பேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முசலி பிரதேச மக்களாகிய நீங்கள் சந்தோசப்பட வேண்டும்.ஏனைய பிரதேச செயலக மக்களும் இந்த அனர்த்தத்தினால் பாதீக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் முதலில் உங்களுக்கே இந்த உதவிகள் கிடைத்துள்ளது. இந்த கிராமத்தில் உதவிகள வழஙகப்படாதவர்களுக்கு அடுத்த கட்டமாக வழங்கப்படும்.
அனர்த்தம் காலத்துக்கு காலம் வந்து கொண்டிருக்கின்றது.இந்த வகையில் உங்களை நீங்கலே பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.கிடைக்கின்ற உதவிகளை நீங்கள் உரிய முறையில் பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
அனர்த்தம் ஏற்படும் போது உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்.
Reviewed by NEWMANNAR
on
February 09, 2013
Rating:
No comments:
Post a Comment