மன்னார் சிறுவர் பூங்கா பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலே திறந்து வைக்கப்பட்டது
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா புனர் நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைப்பதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலேயே குறித்த சிறுவர் பூங்கா நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
-குறித்த சிறுவர் பூங்கா திறப்பு விழாவின் போது அதிகதரிகளுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்காத நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவழ்களைத் தொடர்ந்தே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
-மன்னார் நகர சபைக்குச் செந்தமான சிறுவர் பூங்கா பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட நிலையில் மன்னார் நகர சபை யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அதி நவீன முறையில் குறித்த சிறுவர் பூங்காவினை புனரமைப்புச் செய்துள்ளது.
சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த பூங்கா அதி நவீன விளையாட்டு உபகரணங்களை பயண்படுத்தி புனர் நிர்மானம் செய்யப்பட்டது.
-இதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாதம் 12 ஆம் திகதி(12-02-2013) குறித்த சிறுவர் பூங்கா திறக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை கடந்த 2 வாரங்களுக்கு முன் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது.
-இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் திறப்பதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் நேற்று காலை அதனை திறப்பு விழா செய்யாமல் பின் தள்ள பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சகலரும் ஒன்றினைந்த போதும் மன்னார் நகர சபை செயலாளர் எவ்விதத்திலும் ஆதரவு வழங்கவில்லை.அரச அதிகாரிகளை விருந்தினராக அழைத்த போதும் அவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் மன்னார் நகர சபை தலைவர்,உப தலைவர் ,உறுப்பினர்கள்,நகர சபை பனியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு முழுமையான ஆதவை வழங்கினர்.
குறித்த சிறுவர் பூங்கா திறப்பு விழாவின் போது அமைக்கப்பட்ட கல்வெட்டில் மன்னார் நகர சபையின் செயலாளரது பெயர் பதிவு செய்யப்படாத நிலையிலே அவர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.
-தற்போது அரசாங்கத்தின் சுற்றறிக்கையின் பிரகாரம் அரச அதிகாரிகளை நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக இருந்தால் வடமாகான ஆளுனரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காண அனுமதி பெற கால தாமதம் ஏற்படும் என்றதன் காரணத்தினால் நிதி ஒதுக்கினர் மற்றும் உள்ளுராச்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டது.
மன்னார் நகர சபை கைப்பற்றப்பட்டு சுமார் 20 மாதங்களை கடந்த நிலையில் மன்னார் நகர சபை செயலாளரது பணி போதாத அளவே உள்ளது.
குறித்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் குறித்த நிகழ்வை முடக்குவதே அவரது நோக்கமாக காணப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை தீர்மானம் எடுத்தே செலாளரது பெயர் கல்வெட்டில் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டே குறித்த சிறுவர் பூங்கா ஏற்கனவே தீர்மானித்தபடி திறந்து வைக்கப்பட்டதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னார் சிறுவர் பூங்கா பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலே திறந்து வைக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
February 13, 2013
Rating:
No comments:
Post a Comment