மன்னாரில் பெண்னை முச்சக்கர வண்டியில் கடத்த முயற்சி செய்த வழக்கு-குற்றவாளிகளுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை .
மன்னார் பஸார் பகுதிக்கு வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்று குறித்த பெண்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை மற்றும்,குறித்த பெண்னை முச்சக்கர வண்டியில் பலவந்தமாக ஏற்ற முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடப்பட்ட இரண்டு இளைஞர்களும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் குறித்த 2 இளைஞர்களுக்கும் 2 வருட கடூழிய சிறைத்தன்டனையை விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்தார்.
-இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,,,,
-மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மன்னார் பஸார் பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்களை கொள்வனவுச் செய்ய வந்துள்ளார்.இதன் போது மன்னார் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று குறித்த யுவதியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததோடு ,முச்சக்க வண்டியில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் மேறகொண்ட துரித நடவடிக்கையினைத் தொடர்ந்து குறித்த 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன் போது குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பின் பிணையில் விடப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடை பெற்று வந்த நிலையில் தாம் இருவரும் நிருபராதிகள் என மன்றில் தெரிவித்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரானை மன்னார் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரனைக்காக எடுத்துக்கொள்ளளப்பட்டது.
-குறித்த இரண்டு நபர்கள் மீதும் மன்னார் பொலிஸார் இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இதன் போது குறித்த 2 இளைஞர்களும் தாம் குற்றவாளிகள் என மன்றில் ஒத்துக்கொண்டுள்ளனர்.
விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இரண்டு இளைஞர்களுக்கும் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதில் முதல் வழக்காண பெண்ணை கடத்த முயற்சி செய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் குறித்த இரண்டு இளைஞர்களுக்கும் 1 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,தலா 1500 ரூபாய் அபராதமும் விதித்தார்.
குறித்த இரண்டு இளைஞர்களும் 2 மாத கடூழியச்சிறை தண்டனையை அனுபவிக்குமாறும் ஏனைய 10 மாத தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
இரண்டாவது வழக்கான குறித்த பெண்ணை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்ற முயற்சி செய்த வழக்கில் குறித்த 2 இளைஞர்களுக்கும் 1 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபாய் அபராதமும் விதித்தார்.
-குறித்த வழக்கில் இருவரும் 1 மாத கடூழியச்சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும் ஏனைய 11
மாத தண்டனையை 5 வருடங்களுக்கும் ஒத்தி வைத்துள்ளார்.
குறித்த இருவரும் தற்போது 3 மாத கடூழியச்சிறைத்தண்டனையும்,5 வருடம் ஒத்தி வைக்கப்பட்டசிறைத்தண்டனையும் தலா 3ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னாரில் பெண்னை முச்சக்கர வண்டியில் கடத்த முயற்சி செய்த வழக்கு-குற்றவாளிகளுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை .
Reviewed by NEWMANNAR
on
February 13, 2013
Rating:

No comments:
Post a Comment