மன்- அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையில் கடந்த வருடம் க.பொ.த.உ பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 32 பேர் பல்கலைக்கழத்திற்கு தகுதி- அதிபர் எம்.வை.மாஹீர்
எமது பாடசாலையில் கல்வி கற்று கடந்த வருடம் 2012ம் ஆண்டு நடை பெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மீண்டும் ஒரு முறை முதன்நிலைப் பெறுபேறுகளை பெற்று மன்னார் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளதுடன், அண்மையில் வெளியான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் 2011ம் ஆண்டு மாணவர்களின் புதிய சாதனைகளும், அதிகளவான மாணவர்கள் பல்லைக்கழக அனுமதிக்கான தகுதியினையும் பெற்றுள்ளதாக மன்னார் அல்-அஸ் ஹர் ம.வி நவோதைய பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.வை.மாஹீர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
எமது பாடசாலை மாணவர்களினால் இச்சாதனைகள் அடையப்பெற்றமைக்காக முதலில் அல்லாஹ்விற்கு நன்றிகளை கூறிக்கொள்ளுகின்றேன்.
இந்த மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், விஷேட வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு எமது பாடசாலை சமூகம் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
இந்த நிiயில் அண்;மையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் அடிப்படையிலும்; கடந்த இரு வருட மாணவர்களில் முன்னிலையிலும் பார்க்க இம்மாணவர்களின் சாதனை அதிகரித்த நிலையிலே காணப்படுகின்றது.
மருத்துவத்துறையில் 2011ல் செல்வி எச்இஎம். றிஸ்மியா, செல்வன் ஆர்.எம்.மிஸராப் , செல்வன் ஏ.எம்.இல்;யாஸ்,ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.
கடந்த வருடம் 2012ல் வர்த்தகத் துறையில் செல்வன் nஐ.நவ்ராஸ் சாதனை படைத்துள்ளார். செல்வன் ஏ.எம்.அஸ்மின் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் ,செல்வன் ஏ.எம்.நிஸ்வர் 2ஏ.பி சித்தியும் பெற்றுள்ளனர்.
2012ல் மாத்திரம் பல்கலைக்கழக தகுதிபெற்றோர் கணித,விஞ்ஞான துறையில் 26 மாணவர்களும், கலை,வர்த்தகத்துறையில் 15 மாணவர்களுமாக மொத்தம் 32 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றுள்ளனர்.
வர்த்தகத் துறையில் கடந்த இரு வருடங்கள் மாவட்ட மட்டம் முதல் நிலையினை இப்பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் பெற்று வருகின்றதாக மன்னார் அல்-அஸ் ஹர் ம.வி நவோதைய பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.வை.மாஹீர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
மன்- அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையில் கடந்த வருடம் க.பொ.த.உ பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 32 பேர் பல்கலைக்கழத்திற்கு தகுதி- அதிபர் எம்.வை.மாஹீர்
Reviewed by Admin
on
February 27, 2013
Rating:

No comments:
Post a Comment