நமது பண்பாட்டுச் செல்வங்களைப் பாதுகாக்க தமிழ் விழாக்கள் தேவை கம்பன் கழக விழாவில் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
கடந்த திங்கள் கிழமை (25.03.2013) கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இராமகிருஷ்ணமிஷனில் இடம்பெற்ற நான்கு நாள் கம்பன் விழாவின் இறுதிநாள் அமர்வில் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றும்போதே அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெப்ரவரி மாதம் 22 – 25ஆம் திகதி வரையிலான நான்கு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் இறுதிநாள் அரங்கான குறள் அரங்கில் தொடக்கவரையாற்றிய அடிகளார் அங்கு தொடர்ந்து கூறியதாவது, உயிரை இழந்தோம் உரிமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா? நாம் எல்லாவற்றையும் இழந்தாலும் நாம் இழக்க முடியாத செல்வங்கள் பல இன்னும் நம்மிடம் உள்ளன. அதுதான் நம்முடைய மொழி, அதுதான் நம்முடைய இலக்கியங்கள், அதுதான் நம்முடைய கலைகள், அதுதான் நம்முடைய பண்பாடுகள்.
தலைநகரிலே தனித்துவம் மிக்க தமிழ் அமைப்பாக, தலைநிமிர்ந்து நிற்பது கொழும்புக் கம்பன் கழகம். இது கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்க்கிறது. கொழும்புக் கம்பன் கழகம் எடுக்கும் இந்தக் கம்பன் விழா இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை. இதுபோன்ற விழாக்கள் மூலமாகத்தான் நாம் தமிழின் சிறப்பை உணர முடியும். தமிழராகிய நாம் நமது தனிப்பெருமை எத்தகையது என்பதைச் சிந்திக்க முடியும். இந்த விழா நம்மை நாமே திரும்பிப் பார்க்கின்ற விழா. நமது அருமை பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து மகிழுகின்ற விழா.
உலக வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகும். அதாவது ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் எதிரிகள் முதலில் அந்த இனத்தில் மொழியை அழித்திருக்கின்றார்கள். மொழி அழிந்தால் ஒரு இனம் தானாகவே அழி;ந்துவிடும்.
மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு தன் பண்பாட்டை எடுத்துச் செல்லும் வழி. தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது நமது வெறும் 'வழி' மட்டுமல்ல, அதுதான் நமது 'விழி.' ஏனென்றால் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழின் எழுச்சி, வீழ்ச்சி - வெளிச்சம், இருட்டு – மேடு, பள்ளம் இவற்றை உற்றுப்பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். தமிழனின் மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள் ஆட்டம்கண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றுகின்றர் |
அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தொடக்கவுரை ஆற்றுகின்றார். |
நமது பண்பாட்டுச் செல்வங்களைப் பாதுகாக்க தமிழ் விழாக்கள் தேவை கம்பன் கழக விழாவில் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
Reviewed by Admin
on
February 27, 2013
Rating:
2 comments:
Ithu madum thum thana
Ithu madum thum thana
Post a Comment