மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட சந்திப்பு.
மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்திற்கும்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீத்திர அவர்களுக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அழைக்கப்பட்ட திணைக்கலங்களின் தலைவர்கள் பலர் சமூகமளிக்காததன் காரணத்தினால் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த கலந்துரையாடல் முடிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் பொருளாளர் ஐ.சால்ஸ் தெரிவித்தார்.
-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
-மன்னார் மாவட்ட மக்களின் நலன் கருதி கடந்த வருடம் மன்னாரில் மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிலையில் குறித்த சங்கம் மன்னார் நகர சபையுடன் இணைந்து பல்வேறு வேளைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக தீர்மானங்களை ஏற்கனவே மேற்கொண்டிருந்தோம்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வரியிருப்பாளர் சங்கத்திற்கும்,திணைக்கலங்களின் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம்.
ஆனால் குறித்த கலந்துரையாடலின் போது வரியிருப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளும்,அரசாங்க அதிபரும்,மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள் ஆகியேர் கலந்து கொண்டனர்.எனைய திணைக்கலங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் மன்னார் நகர சபையுடன் இணைந்து மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கம் மேற்கொள்ள இருந்த பலதரப்பட்ட விடையங்கள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர மற்றும் நரகசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
எனினும் அழைக்கப்பட்ட திணைக்கலங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளாததன் காரணத்தினால் குறித்த கலந்துரையாடலின் போது தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் பொருளாளர் ஐ.சால்ஸ் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட சந்திப்பு.
Reviewed by Admin
on
February 11, 2013
Rating:

No comments:
Post a Comment