கிளிநொச்சியில் நடமாடும் வைத்திய முகாம்.
மேத்தா நிறுவனத்திற்கு நிதிவழங்கும் 'லிபரா' அமைப்பின் வெளிநாட்டு ஆலோசகர்களின் கலந்துரையாடலும், நடமாடும் மருத்துவ முகாமும் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை கண்டி வீதி, கிளிநொச்சியில் உள்ள கருணை இல்லத்தில் இடம் பெறவுள்ளதாக மேத்தா அமைப்பின் தொடர்பதிகாரி,திரு. சின்கிலேயர் பீற்றர் தெரிவித்தார்.
கடந்த 3 வருடங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 300 க்கும் அதிகமான நபர்களுக்கு நடமாடும் சேவை மூலம் செயற்க்கை கை, கால், சார்பு உறுப்புகளை தமது நிறுவனம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ் மனித நேயபணிக்கு இலங்கையில் இயங்கும் 'லிபரா' ஸ்தாபன பணிப்பாளர் வண.பிதா போல் நட்சத்திரம் நிதியுதவி வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் இவ் ஸ்தாபனத்தின் வெளிநாட்டு 'லிபரா' இயக்குனர்சபை எதிர்வரும் 18.02.2013 திங்கட் கிழமை தமது உதவியை, மேத்தா நிறுவனம் மூலம் பெற்ற சகல பயனாளிகளையும் சந்தித்து நேரடியாக, ஆய்வு, கலந்துரையாடல் செய்ய உத்தேசித்துள்ளனர்.
18 ஆம் திகதி சந்திப்பை தொடர்ந்து 18 அம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடமாடும் வைத்திய முகாம் நடைபெறவுள்ளது.
இதில் செயற்கை கை, கால் ஆதாரங்கள் திருத்தி கொடுப்பதுடன் புதிய அளவுகளும் எடுக்கப்படும்.
இவ் நடமாடும் சேவையில் வெளிநாட்டு, உள்நாட்டு வைத்தியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மேத்தா அமைப்பின் தொடர்பதிகாரி,திரு. சின்கிலேயர் பீற்றர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
கிளிநொச்சியில் நடமாடும் வைத்திய முகாம்.
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment