மன்னாரில் அமைக்கப்பட்ட மதகுகள் முழுமை பெறாமை குறித்து கிராம மக்கள் விசனம் தெரிவிப்பு.(படங்கள்)
குறித்த கிராமங்களில் இடர் முகாமைத்துவ அமைச்சினால் 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.அதற்கான ஒப்பந்தகாரர்கள் தெரிவு மற்றும் தொழில்நுட்ப அலுவலகர் தெரிவு போன்றவற்றை மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் இணைப்பாளரே மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஒரு மதகு அமைப்பதற்கு 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.(180,000. 00) ஆனால் நீண்ட நாட்களாகியும் குறித்த வேலைத்திட்டம் முழுமையடையவில்லை.
மன்னார் நகர சபையினால் இடங்கள் தெரிவு செய்யப்பட்டு சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் மன்னார் நகர சபையின் தொழில் நுற்ப அலுவலகர் ஒருவரினால் குறித்த 16 மதகு வேளைத்திட்டங்களும் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பல மாதங்களாகியும் குறித்த வேளைத்திட்டம் பூர்த்தியாக்கப்பட்வில்லை.இதனா ல் குறித்த மதகுகள் அமைக்கப்பட்ட வீதிகள் குண்றும் குழியுமாக காணப்படுகின்றது.இதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் மன்னார் நகர சபையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் வழங்கிய மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவிக்கையில்,,,,
இடர் முகாமைத்துவ அமைச்சினால் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்படும் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு கல்வெட்டு(மதகு) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வேலைத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டது.குறித்த கிராமங்கள் தெரிவினை மன்னார் நகர சபையே மேற்கொண்டது.
இதன் போது மன்னார் நகர சபையின் தொழில்நுட்ப அலுவலகர் ஒருவர் குறித்த வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்தார்.இதன் போது இருதி நேர வேளைகள் முழுமை பெறாமை குறித்து குறித்த தொழில் நுற்ப அதிகாரி மன்னார் நகர சபையிடம் முறையிட்டார்.
இந்த நிலையில் குறித்த வேளைத்திட்டத்துக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள மீகுதி பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வேளைத்திட்டம் முழுமை பெற்ற பின்பே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னாரில் அமைக்கப்பட்ட மதகுகள் முழுமை பெறாமை குறித்து கிராம மக்கள் விசனம் தெரிவிப்பு.(படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:
No comments:
Post a Comment