வெள்ள அபாயத்திற்குள்ளான மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் : றிசாத்
நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வெள்ள அபாயத்திற்குள்ளான மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான
றிசாத் பதியுதீன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளான பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையினையடுத்து சில குளங்கள் நிரம்பி வழிவதால் மீண்டும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசாங்க அதிபருக்கு பாதிப்புக்குள்ளான மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக வன்னி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த மழையினையடுத்த ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அரசாங்க அதிபர்களின் தலைமையில், அரச அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் பிராந்திய ஆணையாளர்கள் மிகவும் பொறுப்புடன் மக்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில் முழுமையாக பணியாற்றியதுடன், பாதுகாப்புத் தரப்பினர் அதிகூடிய பங்களிப்பினை வழங்கியமைக்கு வன்னி மாவட்ட மக்களது பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் நன்றியினை அமைச்சர் தெரிவித்துள்ளiமை குறிப்பிடத்தக்கது
வெள்ள அபாயத்திற்குள்ளான மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் : றிசாத்
Reviewed by NEWMANNAR
on
February 16, 2013
Rating:

No comments:
Post a Comment