உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்: யாழில் பதற்றம்

ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்த இப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் 'எல்லாம் முடிஞ்சது போ.. போ" எனக் கூறிய வண்ணம் வந்தனர்.
எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர்.
அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர்.
இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
இச்சம்பவத்தில் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நடராஜா மதியழகன், வலி. தென்மேற்கு பிரதேச சபை தலைவர் எஸ்.ஜெபநேசன் ஆகிய இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறானர் .
எமது நிலங்களை விட்டு வெளியேறுங்கள்; உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. வலி.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினால் வெளியேறிய மக்கள் 23 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலும் தனியார் காணிகளிலும் ,உறவினர்களுடைய வீடுகள் என வசித்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகியும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே சொந்த நிலங்களில் குடியமர்த்தி எமது தொழில்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் மக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளளனர். ஆரம்பமாகியுள்ள போராட்டமானது மாலை 4 மணிக்கு நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. |
உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்: யாழில் பதற்றம்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2013
Rating:

No comments:
Post a Comment