மன்னார் பேசாலை பகுதியில் அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு.
மன்னார் பேசாலைப்பகுதியில் அதிரடிப்படையினரின் நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை அவிதப்பர் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் பேசாலைப்பகுதியில் அதிரடிப்படையினர் மக்களுக்கு தொடர்ந்தும் அசௌகரியங்களையும்,அச்சுருத்தல் களையும் கொடுப்பதாக பேசாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக குறித்த பகுதிக்கு வரும் அதிரடிப்படையினர் அந்த மக்களுடன் முரண்பாடுகளில் ஈடுபடுவதோடு சில பகுதிகளுக்குச் சென்று பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட முயற்சிப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேசாலைப்பகுதியில் மாலை 6 மணிக்குப்பிறகு ஆண்கள் வெளியில் நடமாடுவதை அதிரடிப்படையினர் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த மக்கள் குறிறம் சுமத்தியுள்ளனர்.
குறித்த அதிரடிப்படையினர் மூன்று குழுக்களாக செல்வதாகவும் ஒரு குழுவில் 10 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களது முகாம் பேசாலைப்பகுதில் இருந்து 2 கிலோ மீற்றார் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் அதிரடிப்படையினரின் குறித்த செயற்பாடுகளினால் அந்த மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதீக்கப்பட்ட பேசாலை மக்கள் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை அவித்தப்பர் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க கடந்த 2 வாரங்களுக்கு முன் பேசாலைப்பகுதியில் உள்ள சிலர் மது அருந்திய நிலையில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது கல்லினால் வீசி தாக்குதல் நடத்தியதாகவும்,இதனால் குறித்த வாகனத்தின் கண்ணாடி உடைந்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே மாலை 6 மணிக்கு பின் மது அருந்தி விட்டு வீதியில் இடையூறு செய்பவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற அதிரடிப்படையினர் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நமது நிருபர்
மன்னார் பேசாலை பகுதியில் அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு.
Reviewed by NEWMANNAR
on
February 05, 2013
Rating:

No comments:
Post a Comment