சர்வோதைய அமைப்பின் சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு இன்று.
இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் 1327 சர்வமதத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள குறித்த தேசிய மாநாட்டில் மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 16 சர்வமதத்தலைவர்கள் கலந்து கொள்ளுவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு சர்வோதைய அமைப்பின் இயக்குனரும்,ஸ்தாபகருமான ஏ.ரி.ஆரிய ரட்ன தலைமையில் இடம் பெறவுள்ளது.
குறித்த மாநாட்டின் நோக்கமானது கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படும் சிவில் அமைப்புக்களுக்குள் செயற்பட முடியுமான வழிகளின் மூலம் செயற்பாடுடன் எழுந்து நிற்கும் சர்வோதைய இயக்கத்தின் வேலைத்திட்டங்களின் அனுபவம் மற்றும் பயன்களை பகிர்ந்து கொள்வதே என சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா மேலும் தெரிவித்தார்.
சர்வோதைய அமைப்பின் சர்வ மத தலைவர்களின் தேசிய மாநாடு இன்று.
Reviewed by Admin
on
March 02, 2013
Rating:
No comments:
Post a Comment