மடு கல்வி வலய மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு வலயக்கல்விப்பணிமனையில் வைத்து மடு பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.பி.குரூஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மடு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு குறித்த அப்பியாசக்கொப்பிகள் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த 5 பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் சுமார் 2500 அப்பியாசக்கொப்பிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள்,மன்னார் மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் என்.அரவிந்தன், சர்வோதைய அமைப்பின் சமூக வேலை த்திட்ட இணைப்பாளர் எஸ்.கனேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மலேரியா விழிர்ப்புணர்வு தொடர்புடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மடு கல்வி வலய மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Admin
on
March 02, 2013
Rating:

No comments:
Post a Comment