அண்மைய செய்திகள்

recent
-

பாலச்சந்திரனை இராணுவம் கொல்லவில்லை: ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொல்லவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது நடந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் , இராணுவத்தால் அவர் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பை நான் தான் ஏற்றிருக்க வேண்டும்.


 நாம் அதை முற்றிலுமாக மறுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான 'த இந்து' விற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது மேலும் தெரிவித்தவை, இலங்கைக்கு எதிரான ஆதாரங்கள் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அடுக்கிவரும் ஆதாரங்கள் தொடர்பில் கேட்கப்பட்டமைக்கு அத்தகைய அறிக்கைகள் மற்றும் காணொளிகளை வெளியிடுதல் அவற்றின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

 நாம் வெறுமனே ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது. அவர்கள் ஒரு குழுவினுடையதோ, எதிர்க்கட்சியினதோ கருத்தை மட்டும் கேட்கக்கூடாது. எதிர்க்கட்சியினர் மற்றைய நாடுகளின் உதவிகளைப் பெற்று இங்கு அரபு வசந்தத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அது இலங்கையில் நடக்காது. வடக்கு மாகாணசபை தேர்தல் மேலும் வடக்கில் செப்டம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதுடன் மற்றைய 8 மாகாண சபைகளும் கொண்டுள்ளதைப் போன்ற அதிகாரத்தை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும்.

 அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை யுத்தத்தின் பின்னர் வெறும் 3 வருட காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் கீழ்க்கட்டுமாண வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. வேறு யார் இவற்றை 3 வருடக் காலப்பகுதிக்குள் செய்து கொடுத்துள்ளனர்? இதனை வந்து பார்த்தவர்கள் எம்மை பாராட்டியுள்ளனர். இந்தியாவும் காஷ்மீர் விவகாரத்தால் மனித உரிமைப்பேரவையில் தொந்தரவுக்குள்ளாகியது. இலங்கை கைப்பந்தைப் போல் ஆகிவிட்டது, ஒவ்வொருவரும் தங்களது பாவங்களை மறைக்க எம்மை தாக்குகின்றனர்.

 தமிழருக்கான அரசியல் தீர்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராவிடின் இவ்விடயத்தில் முன்செல்ல முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்றி என்னால் எதையும் செய்யமுடியாது. ஆரம்பத்தில் உயர் மட்டத்திலிருந்து தலைவர்கள் வழங்கிய தீர்வுகள் தோல்வியடைந்துள்ளன. 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் தோல்வியடைந்துள்ளது.

 மனித உரிமைப் பேரவையில் இந்திய ஆதரவு மனித உரிமைப் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அதனுடன் கலந்துரையாடவில்லை. இந்தியா அயல் மற்றும் நட்பு நாடு என்ற வகையில் அதன் கடமையை அறிந்திருக்கவேண்டும். நான் இந்தியவிற்கு கட்டளையிட முடியாது. இவற்றைத் தவிர முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு மற்றும் இலங்கை இந்திய உறவு தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த செவ்வியின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

 இந்தியா 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த போதும் இரு நாடுகளுக்கிடையேயான உறவும் நல்ல நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலச்சந்திரனை இராணுவம் கொல்லவில்லை: ஜனாதிபதி Reviewed by Admin on March 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.