அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள்- தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன்


தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சுப்பிரமனியம் சிவகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

தமிழர் விடுதலைக்கூட்டனியின் செயலாளர் வி;ஆனந்த சங்கரி அண்மைய நாட்களில் மிக மோசமான அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்களின் தேசிய வாதி போல் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இவருடைய தமிழ்த்தேசிய விரோத நடவடிக்கைகளில் எவ்வாறு பங்காற்றி  தமிழ் மக்களின் அழிவுக்கு அறிக்கையிட்டு வித்திட்டவர் என்பதனை நான் கூறத் தேவையில்லை. யாவருக்கும் தெரிந்த விடையமே. 

இவர் எழுதிய கடிதங்களும்,வெளியிட்ட கருத்துக்களும் இவர் யார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். குhலங்கள் மாறினாலும் வரலாற்றின் வடுக்கள் வலிமை இழந்து விடாது என்பதனை இவர் போன்றவர்கள் புறிந்து கொள்ள வேண்டும்.

-அரசினுடைய அதித சலுகையுடன் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் புலிகளின் மறைவுக்குப்பின் இவர்கள் வேறு வழியின்றி கூட்டமைப்புக்குள் புகுந்து அங்கும் குந்தகமான தனது கைங்காரியத்தை செயற்படுத்துகின்றார்.

கூட்டமைப்பில் ஒற்றுமை எணும் பெயரில் கொள்கையில்லாதவர்களை உள்வாங்கியது தவரான விடையமாகும்.
முள்ளிவாய்க்கால் முடிவு வரை தமிழ் தேசயத்திற்கு எதிராகவே செயலாற்றியவர் திரு.சங்கரி.இவர் எமக்கு வரலாறு கூற வேண்டிய அவசியமில்லை.
இவரது வரலாறு தமிழ் மக்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்ததோன்று.

தமிழ் மக்களின் வெறுப்புக்கூறியவராகவே இவர் நோக்கப்படுகின்றார்.அதிலும் இளைய சமூதாயம் முழுமையாக இவரை நம்பகத்தன்மையற்ற மனிதராகவே சந்தேகப்பார்வையுடன் நோக்குகின்றனர்.

தமிழர்களை அழிப்பதற்கு துணைபுரிந்த இந்திய அரசை மனித உரிமைகள் மாநாட்டில் நடு நிலை வகிக்க வேண்டும் என கோருவது அவருடைய இந்திய விசுவாசத்தை காட்டுகின்றது.

-ஏனெனில் இந்தியாவினுடைய அலுத்தத்தினாலேயே ஆனந்த சங்கரியை கூட்டமைப்பில் இத்தனை குழப்பத்திற்கு மத்தியிலும் வைத்திருக்கினறார்கலோ என கூட்டமைப்பின் நடவடிக்கை ஊடாக சந்தேகிக்க வேண்டியுள்ளது

-எனவே இவர்கள் தமிழர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மை சந்தர்ப்ப வாத ஏமாற்று அரசியலை விட்டு தமிழர்களை குழப்பாமல் விலகியிருப்பதே உகந்தது ஆகும்.

-தமிழ் தேசிய விசுவாசிகள் போல் பத்திரிக்கைகளில் வீர வேசம் பேசுவோர் அத்தனை பேரும் உத்தமர் தானா ? என இளைய சமூதாயம் வேடிக்கையுடன் இவர்களின் கடந்தகால வரலாற்று பக்கங்களுடன் ஒப்பீடு செய்ய முடிகின்றது.

-மூன்று கட்சிகள் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டனியின் வரலாறு முடிவில் என்னவாகியது என்பது அவருக்கே வெளிச்சம்.
-எனவே இவ்வாறானவர்களின் பொறுப்பற்ற வெறுப்பான வார்த்தைகள் நாம் அழிக்கப்பட்டு
 ,அனாதைகளாக்கப்பட்டு,அங்கவீனர்களாக்கப்பட்டு,விதவைகளாக்கப்பட்டு,இல்லிடமற்று,சொல்லிடமின்றி எதிலியாய் தவிக்கும் எம் உறவுகளில் ஏறி சவாரி செய்ய நினைக்கின்றார்கள்.

எனவே தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களையும்,இரட்டை வேடம் போடுகின்றவர்களையும்,சந்தர்ப்ப வாத அரசியல்வாதிகளையும் இணைந்து தமிழ் மக்களின் அறுபது வருட தியாகத்தின் முடிவாக மிஞ்சியுள்ள தமிழ் தேசயக்கூட்டமைப்பின் இணைந்து அரசியல் கட்சியாக பதிய முனைந்தால்,இளைய சமூதாயம் வீதிக்கு இறங்கி போராடுவோம் என்பதனை மிக விநாயமாக அறியத்தருகின்றோம்.

தமிழர்களை இலகுவில்  ஏமாற்றி விட முடியாது என்பதனை இவர்கள் போன்றோர் நினைவில் கொள்வது அவசியம் . என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள்- தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் Reviewed by NEWMANNAR on March 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.