மன்னார் நானாட்டானில் நெல் அமோக விளைச்சல்.படங்கள்
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விவசாய கிராம மக்கள் கடந்த டிசம்பர் மாதம் பயிரிட்ட பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாரிய அழிவுகளின் மத்தியில் காப்பாற்றப்பட்ட நிலையில் போதிய விளைச்சலின் மத்தியில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-கடந்த வருடம் டிசம்பர் மாதம் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக மாவட்டத்தில் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பெரும் போக நெற்பயிர்ச் செய்கையில் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எஞ்சிய நெற்பயிர்கள் காப்பற்றப்பட்டு தற்போது அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தற்போது பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் நெல்லின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆனால் நெல் கொள்வனவு செய்யப்படும் விலை குறைந்த அளவிலேயே காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது அறுவடைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மன்னார் நானாட்டானில் நெல் அமோக விளைச்சல்.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 01, 2013
Rating:

No comments:
Post a Comment