காணிக் கொள்ளையை உடன் நிறுத்துக!
வடக்கில் இரண்டாயிரம் ஏக்கர் வனப்பகுதியை அழித்து அங்கு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சுற்றாடல் அமைப்பு, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் திட்டத்திற்கு அமைய வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னாரில் 1080 ஏக்கர், முல்லைத்தீவில் 983 ஏக்கர், வவுனியாவில் 325 ஏக்கர் வனப்பகுதி இவ்வாறு அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் சுற்றாடலுக்கு ஏற்படும் தீங்கு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உதயன்
காணிக் கொள்ளையை உடன் நிறுத்துக!
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:

No comments:
Post a Comment