மன்னாரில் கஞ்சாப்பொதியுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு.
மன்னார் நகர்ப்பகுதியில் மன்னார் பொலிஸாரினால் வெவ்வேறு இடங்களில் வைத்து கஞ்சாப்பொதியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த 3 பேரும் நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மூவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும்,3 மாதச்சிறைத்தண்டனையையும் விதித்து மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் தீர்ப்பளித்தார்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைத்து கஞ்சாப்பொதியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின் குறித்த 3 பேரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்ட பின் மன்னார் பொலிஸார் குறித்த 3 பேருக்கும் தனித்தனி வளக்கை பதிவு செய்த நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் குறித்த மூவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.
மன்னாரில் கஞ்சாப்பொதியுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:

No comments:
Post a Comment