அமைச்சர் றிஸாட் தலைமையில் விசேட குழுவினர் கோந்தைப்பிட்டி மீன் பிடி துறைமுகப்பகுதிக்கு விஜயம்
மன்னார் கோந்தைப்பிட்டி மீன்பிடி துறைமுகப்பகுதியில் கடந்த வருடம் மீனவர்களுக்கு இடையில் இடம் பெற்ற முறுகல் நிலையினைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த மீன்பிடித்துறைமுகப்பகுதியை பார்வையிடுவதற்காக கைத்தொழில் மற்றும் வணிகத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதின் தலைமையிலான குழுவினர் கோந்தைப்பிட்டி மீன் பிடி துறைமுகப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஇபாரா ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
குறித்த விஜயத்தின் போது அங்கு கடந்த வருடம் இடம் பெற்ற முறுகல் நிலை தொடர்பில் மீனவர்களிடம் குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.
அமைச்சர் றிஸாட் தலைமையில் விசேட குழுவினர் கோந்தைப்பிட்டி மீன் பிடி துறைமுகப்பகுதிக்கு விஜயம்
Reviewed by Admin
on
March 11, 2013
Rating:
No comments:
Post a Comment