அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாட்டிறைச்சிக்கடை விவகாரம்-உரிமையாளர் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் அனுப்பி வைப்பு.


மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட மன்னார் பட்டினத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையம் கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்படுகின்றமையினால் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக குறித்த மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரான அஹமது உசன் என்பவரிடம்   கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,

மன்னார் பட்டினத்தில் அமைந்துள்ள 1 ஆம்,2 ஆம் இலக்க மாட்டிறைச்சி விற்பனை நிலையம் 2013 ஆம் ஆண்டுக்கான கேள்வி  பத்திர அறிவித்தலின் பிரகாரம் பெற்றுக்கொண்டேன். 

1 வருடத்திற்காண கேள்வி தொகையாக 22 இலட்சம் என தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு பங்காண 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினேன்.

இந்த நிலையில் வன்னியில் இருந்து இருந்து மாடு கொண்டு வருவதற்கு மன்னார் நகரசபையால் எனக்கு பாஸ் அனுமதி வழங்கப்படவில்லை.

 நான் இது தொடர்பில் பல தடவைகள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்ததிற்கு அமைவாக 09-02-2013 அன்று முதல் வன்னியில் இருந்து மாந்தை மேற்கு பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்ட இறைச்சிக்கடையில் இருந்து மன்னார் நகரத்திற்கு இறைச்சி கொண்டு வருவதற்கு எனக்கு பாஸ் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பாஸ் 21-02-2013 அன்று எக்காரணமும் இன்றி நிறுத்தி விடப்பட்டது.இது வரை நிறுத்தப்பட்டதற்காண காரணம் எனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் கடிதம் மூலம் பல தடைவை கேட்டும் எவ்வித பலனும் இல்லை.இதனால் எனக்கு ஏற்பட்டுள்ள நஸ்டத்தை மன்னார் நகர சபை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

மன்னார் நகர சபையினால் இது வரை எனக்கு எவ்வித பதிலும் வழங்கப்படாமையினால் நான் வட மாகான ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில்   கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக குறித்த மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரான அஹமது உசன் தெரிவித்தார்.
மன்னார் மாட்டிறைச்சிக்கடை விவகாரம்-உரிமையாளர் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் அனுப்பி வைப்பு. Reviewed by Admin on March 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.