கோந்தைப்பிட்டி கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் மோசடி.
இந்திய வீட்டுத்திட்டத்திட்ட பயணாளிகள் தெரிவில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் பாரிய அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நூர் முகமட் முஹம்மது ஆலம் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச செயலாளராக முன்னைய காலத்தில் கடமையாற்றி வந்த திருமதி ஸ்ரான்லி டி மேல் என்பவருடைய காலத்தில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பயணாளிகளின் பெயர்ப்பட்டியல் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டிருந்தது.
குறித்த 30 பயணாளிகளின் பெயருடன் 27 ஆவது இடத்தில் எனது மனைவியின் பெயரும் காணப்பட்டது.இந்த நிலையில் தற்போது மன்னார் பிரதேச செயலாளராக செல்லையா தயானந்தா பதவியேற்று கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த 30 பேருடைய பெயர் பட்டியல் நீக்கப்பட்டு புதிய பயணாளிகள் தெரிவு இடம் பெற்றுள்ளது.
குறித்த புதிய பயணாளிகள் பெயர் பட்டியலில் 42 பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னைய பட்டியலில் உள்ள பலர் புதிய பட்டியளில் நீக்கப்பட்டு 42 பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இவ் வீட்டுத்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
-அதே சமயம் தனியார் அமைப்புக்களினால் ஏற்கனவே வீட்டுத்திட்டங்கள் பெற்றுக்கொண்டவர்களும் தற்போது இந்திய வீட்டுத்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
-இது போன்ற பல்வேறு மோசடிகள் குறித்த பயணாளிகள் தெரிவில் இடம் பெற்றுள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளிகள் முன் வந்து தமது பிரச்சினைகளை வெளியிட அஞ்சுகின்றனர்.இது வரை எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத பலர் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
-அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற சகல வேளைத்திட்டங்களின் போது அரசியல் வாதிகளுக்கு பின்னால் நிற்கின்ற சிலர் என்னைப்போன்ற சிலரது விபரங்களை நீக்குவதற்காகவே செயற்படுகின்றனர்.
அரசியல் வாதிகளுக்கு பின்னால் நிற்கின்றவர்களின் குடும்பங்களின் விபரங்கள் மட்டுமே வர வேண்டும் என்ற என்னத்துடன் செயற்படுகின்றனர்.
எனவே இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டம் உரிய முறையில் பாதீக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும்.
அரசியல் காரணங்களினால் பணக்கார வர்க்கத்தினருக்கும்,தனிப்பட்ட நபருக்கும் சென்றடையக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்க விரும்புகின்றேன்.
-பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நான் மன்னார் பிரதேசச் செயலாளர் செல்லையா தயானந்தா அவர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பான கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நூர் முகமட் முஹம்மது ஆலம் மேலும் தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்திகள்
கோந்தைப்பிட்டி கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் மோசடி.
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:
No comments:
Post a Comment