எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் மீள் குடியேறியுள்ள தீவுப்பிட்டி கிராமத்து மக்கள் .
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி கிராமத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவுப்பிட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் 40 குடும்பங்களும் யாழ்ப்பாணம் உற்பட பல பாகங்களில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் கடந்த 16 வருடங்களாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.-இவர்களில் அதிகானோர் தற்போது உள்ள வீடுகள் மற்றும் காணிகளின் உரிமையாளர்கள் இந்தியாவில் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தற்போது 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
-குறித்த கிராமத்தில் மின்சார வசதி இல்லைஇகுடி நீர் பிரச்சினை காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.-இதே வேளை குறித்த கிராமத்தில் புனர் வாழ்வு பெற்ற முன்னால் புலி போராளிகள் பலர் உள்ள போதும் அவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கு எவ்வித உதவிகளும் இது வரை நானாட்டான் பிரதேசச் செயலகத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த மக்களுடைய பதிவுகள் அணைத்தும் தற்போது நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே கடந்த 16 வருடங்களாக வாழ்ந்து வரும் எமக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் அகஸ்ரஸ் சந்திரையா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போதுகுறித்த தீவுப்பிட்டி கிராமத்தில் குடியேறியுள்ள மக்களின் குடியேற்றம் நிரந்தர குடியேற்றம் இல்லை.இவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த கிராமங்களுக்குச் சென்று மீள் குடியேறுமாரு நாங்கள் அறிவித்தல் வழங்கி விட்டோம்.தற்போது இவர்கள் குடியமர்ந்துள்ள வீடுகள் மற்றும் காணிகளின் உரிமையாளர்கள் கடந்த யுத்த காலத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியா சென்றுள்ளனர்.
அவர்களுடைய வீடு மற்றும் காணிகளை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. ஒரு சிலர் மாத்திரமே சொந்தக்காணியுடன் உள்ளனர்.இவர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.-இந்த மக்கள் அரசாங்கத்தினால் குடியேற்றப்படவில்லை என தெரிவித்த பிரதேச செயலாளர் இலங்கை நாட்டில் யாரும் எங்கும் சென்று குடியேற முடியும் என தெரிவித்தார்.
மன்னார் நாணாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி கிராமத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் மீள் குடியேறியுள்ள தீவுப்பிட்டி கிராமத்து மக்கள் .
எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் மீள் குடியேறியுள்ள தீவுப்பிட்டி கிராமத்து மக்கள் .
Reviewed by NEWMANNAR
on
March 17, 2013
Rating:

No comments:
Post a Comment