ஐ.பி.எல்.தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு
சென்னையில் ஆரம்பமாகவுள்ள இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மாணவர்கள் சங்கத்தினால் பொலிஸ் ஆணையாளருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஆறாவது ஐ.பி.எல். 'டுவென்டி – 20' தொடருக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், பஞ்சாப் தவிர, ஏனைய 8 அணிகளில் இலங்கை அணியின் 13 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியில் நுவன் குலசேகர, தனஞ்ஜய ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் சென்னை மண்ணில் களமிறங்கினால் கடும் எதிர்ப்பு ஏற்படும். எனவே, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களை சேர்க்க வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) அறிவுறுத்தியாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகளையே நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் இப்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு
Reviewed by Admin
on
March 25, 2013
Rating:

No comments:
Post a Comment