அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய மட்டப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு தகுதி


இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் மன்னார் மாவட்ட
பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்ட போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சம்பியனாகி தேசிய மட்டப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளது. 26.03.2013 செவ்வாய் முருங்கன் மைதானத்தில் நடைபெற்ற மேற்படி போட்டியில் அரிப்பு றோ க த பாடசாலையை 4- 0 என்ற கோள் கணக்கிலும் முருங்கன் மமவி 3-0 என்ற கோள் கணக்கிலும் வெற்றி பெற்று மாவட்ட சம்பியனாகியது.



தொடர்ந்து வவுனியா மாவட்ட சம்பியனாகிய மூன்று முறிப்பு பாடசாலையை 5-0 என்ற கோள் கணக்கில் வெற்றி பெற்று பிராந்திய சம்பியனாகி தேசிய மட்டத்தில் பங்கு பற்றும் தகுதி பெற்றுள்ளது.


இத்தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியானது வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 27ம் 28ம் 29ம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 தகவல்
ப.ஞானராஜ்
மாவட்ட இணைப்பாளர்
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய மட்டப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு தகுதி Reviewed by Admin on March 27, 2013 Rating: 5

1 comment:

ytest said...

wast of time, these guys have no idea about professional football.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.