வீடமைப்புத் திட்டத்தில் பாரபட்சம் காண்பிக்கப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

வீடமைப்பு உதவிக்கான பயனாளிகளின் இறுதிப் பட்டியல் கடுமையான முறையில் அடையாளங் காணப்பட்டு முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பான முறைப்பாடுகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் தெரிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 270 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக வட மாகாணத்தில் ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதனைத் தவிர மலையக மக்களுக்காக நான்காயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலுவிழந்தோர் இரண்டாயிரம் பேருக்கு வீடுகளை அமைக்கும் திட்டமும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்புத் திட்டத்தில் பாரபட்சம் காண்பிக்கப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment