அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் மூடப்பட்டுள்ள இரு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கும் மீள் விண்ணப்பம் கோரப்படவுள்ளது-மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ்


மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கட்டிடத்தொகுதியினுள் இயங்கி வந்த மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள் இரண்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


இது தொடர்பாக நுகர்வோர் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு பல தடைவை கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

குறித்த இறைச்சிக்கடைகள் இரண்டும் மூடப்பட்டமைக்கு அதன் உரிமையாளரே காரணம்.
இவ்வளவு காலமும் கேள்விப்பத்திர கோரல்களின் மூலமே இறைச்சிக்கடைகள் வினியோகிக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையிலேயே குறித்த இரண்டு இறைச்சிக்கடைகளும் ஒரு நபருக்கே வினியோகிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 பேருக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த போதும் குறித்த நபர் தெரிவு செய்யப்பட்டார்.
சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே கேள்விப்பத்திரம் கோரப்பட்டது.அதன் அடிப்படையில் குறித்த இறைச்சிக்கடைகளை அவர் பெற்றுக்கொண்டார்.

தற்போது வெளியில் இருந்து மாடு கொண்டு வர முடியாது.இறைச்சியை கொண்டு வந்து தான் விற்க வேண்டும் என கூறுகின்றார்.

இறைச்சியை தொகையாக வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வது ஒரு முரனான விடையமாக காணப்படுகின்றது.

இறைச்சிக்கடையினை கேள்விப்பத்திர கோரலின் மூலம் பெற்றுக்கொண்டதன் பின் மாடு கொண்டு வருவதற்கு காஸ்டமாக இருக்கின்றது என நகர சபை தலைவரிடம் தெரிவித்தமையினை தொடர்ந்து தலைவர் தனது தத்துனிவு மற்றும் அதிகாரங்களை பயண்படுத்தி இறைச்சியாக கொண்டு வந்து ஒரு சில தினங்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தார்.

-அதனை குறித்த இறைச்சி விற்பனையாளர் சாட்டாக வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக மாட்டு இறைச்சினை கொண்டு வந்து விற்பனை செய்ய நடவடிக்ககைகளை மேற்கொள்ளுகின்றமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.அது மக்களை பாதிக்கின்றது.

ஏனைய மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களையும் பாதீக்கும்.
-உண்மையிலேயே அறுக்கப்பட்டு மன்னாருக்கு கொண்டு வரப்படுகின்ற மாட்டு இறைச்சி உரிய முறையில் பரிசோதிக்கப்படுகின்றதாக என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் அது சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
-இந்த நிலையில் தலைவர் ஒரு சில தினங்களுக்கு அறுத்த இறைச்சியை கொண்டு வருவதற்கு வழங்கியிருந்த அனுமதியை தானாக இரத்துச் செய்துள்ளார்.

அறுக்கப்பட்ட இறைச்சி கொண்டு வந்து விற்பனை செய்வதற்கும் மன்னார் நகர சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.வன்னியில் இருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு சபை அனுமதிக்கவில்லை.

-இந்த நிலையில் மீண்டும் கடையினை திறப்பதற்கு மன்னார் நகர சபையால் அவருக்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கியிருந்தோம்.ஆனால் இது வரை திறக்கவில்லை.

இதனால் இந்த மாதம் இடம் பெற்ற நகர சபை கூட்டத்தின் போது குறித்த இறைச்சிக்கடையினை நடாத்துவதற்கு மீண்டும் மீள் கேள்விப்பத்திரம் கோருதல் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேறு நபரை தேர்ந்தெடுத்து குறித்த இறைச்சிக்கடைய நாடத்த தீர்மானித்துள்லோம்.

-மக்களின் நலன் கருதி இது போன்ற விடையங்களை தனி நபர்களுக்காக நாங்கள் அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது.

உடனடிகாக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்ற மாதம் முதல் மீண்டும் குறித்த இரண்டு இறைச்சிக்கடைகளும் இயங்குவதற்காண நடவடிக்கைகளை மன்னார் நகர சபை மேற்கொண்டு வருவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகரில் மூடப்பட்டுள்ள இரு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கும் மீள் விண்ணப்பம் கோரப்படவுள்ளது-மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் Reviewed by Admin on March 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.