அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு! மன்னார் ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகை

இலங்கைத் தமிழர் விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்கான அக்கறையும் விழிப்புணர்வும் தமிழ் நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் நிலையையும் அங்குள்ள மாணவர் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் அறநெறிப் போராட்டங்களையும் நன்றியோடு நினைந்து வரவேற்பதோடு அங்கு ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகாத வன்முறைச் செயல்கள் எமக்கு வருத்தமளிப்பதாக இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.



  அதாவது இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டு இந்தியா வந்திருந்த பௌத்த மத பிக்கு ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும், மற்றொரு பௌத்த பிக்கு சென்னை மத்திய புகையிரத நிலையத்திலும் தாக்கப்பட்ட சம்பவங்களை ஊடகம் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம். ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களையும், அதுவும் மதத்தலைவர்களையும் தாக்கும் செயற்பாடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தலுக்கு உள்ளாக்க முடியாது.

 இது மனிதத்திற்கு எதிரான குற்றம்.
  ஏதுமறியாத அப்பாவிகள் அதிகளவில் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள பின்புலங்களை இந்த மண்ணில் நாம் கொண்டுள்ளோம். ஆயினும் இந்த மண்ணின் மக்களின் நீடிய விடுதலைக்கும் நல்லிணக்கத்திற்கும் இப்படிப்பட்ட செயற்பாடுகள் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இலங்கையில் இருந்து வருகைதரும் அப்பாவி சிங்கள மக்களையும், பௌத்தமத குருக்களையும் தாக்குவதும் தாக்கமுயல்வதும் நீதிநிலைநிறுத்தும் வேட்கை உள்ளவர்களின்  செயல்முறைகளுக்கு முற்றிலும் முரணானது.

  ஆகவே இத்தகைய மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்களை மிக வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழகத்தில் புத்தபிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின்முன் நிறுத்தவும் இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவும் இந்திய, தமிழக அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.

மன்னார் குருக்கள் மற்றும் மக்கள் பெயரால்
(ஒப்பம்)
இரா. யோசேப்பு, மன்னார் ஆயர்
தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு! மன்னார் ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகை Reviewed by Admin on March 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.