உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை! புதிய போப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ!

Video
புதிய பாப்பரசர் தன்னை "முதலாவது பிரான்ஸிஸ்' என அழைத்துக் கொள்வார். வெண் புகை வெளியாகி ஒரு மணி நேரத்தின் பின்னர் புதிய பாப்பரசர் சென். பீற்றர்ஸ் தேவாலய உபரிகையில் தோன்றி, வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
பிரான்ஸ் நாட்டுக் கர்தினால் ஜீன் லுயிஸால் புதிய பாப்பரசர் பற்றிய அறிவிப்பு லத் தீன் மொழியில் வெளியிடப்பட்டது. ""மட்டற்ற மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன், எங்களுக்கு ஒரு பாப்பரசர் கிடைத்துள்ளார்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.
115 கர்தினால்கள் நான்கு தடவைகள் வாக்களித்ததன் பின்னர் ஐந்தாவது தடவையில் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்தனர். அதனை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் முதலில் நள்ளிரவில் வத்திக்கான் தேவாலயத்தில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது. தேவாலய மணியும் ஒலிக்கப்பட்டது.
புதிய பாப்பரசர் யார் என்று அறியும் ஆவலுடன் வத்திக்கானின் சென். பீற்றர்ஸ் தேவாலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் புகைபோக்கியில் வெண் புகை வெளிப்பட்டதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் அண்மையில் பதவி விலகி இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக தன்னால் தொடர்ந்து திருச்சபையை வழிநடத்த முடியவில்லை என்று அறிவித்து இறப்புக்கு முன்பாகவே அவர் பதவி விலகி இருந்தார்.அவரது இடத்துக்கே புதியவர் பொறுப்பேற்றுள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் முதல் தடவையாக லத்தீன் அமெரிக்க நாடொன் றைச் சேர்ந்த கர்தினால் ஒருவர் பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.
உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை! புதிய போப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ!
Reviewed by NEWMANNAR
on
March 14, 2013
Rating:

No comments:
Post a Comment