வன்னி தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர் தொகை குறைப்பு; உதவித் தேர்தல் ஆணையாளர் சேர்ப்பு

கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவுகளின்படியே இந்தக் குறைப்பு ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு இருந்த வாக்காளர்களிலும் பார்க்க 2012 ஆம் ஆண்டு வன்னி தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகை 2213 வாக்காளர்களினால் குறைவடைந்திருப்பதையடுத்தே குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பதிவின்படி, 2 இலட்சத்து, 21 ஆயிரத்து, 409 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2 இலட்சத்து, 19 ஆயிரத்து, 196 ஆக குறைந்துள்ளது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2011ஆம் ஆண்டிலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருககின்றனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியாவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் சிறு அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வவுனியாவில் குடியிருந்த பலர், வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளமையினால் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர் தொகை குறைப்பு; உதவித் தேர்தல் ஆணையாளர் சேர்ப்பு
Reviewed by Admin
on
March 26, 2013
Rating:

No comments:
Post a Comment