ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி- மன்னார் மாவட்ட மீனவர்களின் 3 கோரிக்கைகளும் நிறைவேற்றம்- மீ.கூ..ச. தலைவர் என்.எம். ஆலம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி மன்னாரில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்ட போரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து அதிகாரிகளினால் குறித்த 3 கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தினுள் தீர்வு பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மீனவர்களுடைய கோரிக்கைகளாக இந்திய மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல்,கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்பட வேண்டும்,சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் போன்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர தலைமையில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.
-இதன் போது இராணுவ,பொலிஸ்,கடற்படை உயரதிகாரிகள்,மேலதிக அரசாங்க அதிபர்,மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள்,மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பனிப்பாள்,மேலதிக அரசாங்க அதிபர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மீனவர்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது இந்திய மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது இந்திய மீனவர்கள் அத்துமீறி மன்னார் கடற்பரப்புக்குள் நுளைவதை தடுக்கும் முகமாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே அதனை அமுல் படுத்த முடியும் எனவும்,முதலில் மன்னார் மாவட்டத்தில் தொழிலில் ஈடுபடுத்தப்படும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில் முறைகள் முற்றாக உடன் நிறுத்தப்பட்டுவதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கோரிக்கையான கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கலந்தரையாடப்பட்டது.
இதன் போது மீனவர்களுக்கு அட்டை,சங்கு,மீன் ஆகியவை பிடிப்பதற்காக கடற்படையினரினால் வழங்கப்படும் பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டு குறித்த பாஸினை மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளரின் கைகொப்பத்துடன் வழங்குவதறகாண நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது கோரிக்கையான சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போது வட பகுதி கடலில் இருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் குறித்த சிலின்டர் தொழில் செய்ய முடியாததன் காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் வட பகுதி கடலில் சிலின்டர் தொழில் தடை செய்யப்பட்டுள்ளது.
தென் பகுதி கடலில் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் சிலின்டர் தொழில் செய்வதற்காண அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
-குறித்த தீர்மானங்கள் நேற்று வியாழக்கிழமை முதல் உடன் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் நூர் முஹமட் முஹம்மது ஆலம் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி- மன்னார் மாவட்ட மீனவர்களின் 3 கோரிக்கைகளும் நிறைவேற்றம்- மீ.கூ..ச. தலைவர் என்.எம். ஆலம்
Reviewed by NEWMANNAR
on
March 01, 2013
Rating:

No comments:
Post a Comment