அண்மைய செய்திகள்

recent
-

மன்னாருக்கு இராஜந்திரிகள் குழு விஜயம். பட இணைப்பு


அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜந்திரிகள் குழுவொன்று இன்று சனிக்கிழமை காலை மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தனர்.

வருகை தந்த இவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள  முஸ்ஸிம் மக்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அந்த மக்கள் வாழ்ந்து வரும் தற்காலிக வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.

இதன் போது அந்த மக்கள் தமது பிரச்சினைகளான வீடு,குடி நீர்,மலசல கூடம் இண்மை,மின்சாரம் இல்லாமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர்.










இந்த விஜயத்தின் போது தூதுக்குழுவில் பலஸ்தீன், பாகிஸ்தான்,ஈரான், ஈராக்,இந்தோனோசியா,பங்காளதேஸ்  மற்றும் மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் உள்ளடங்குகின்றனர்.


அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் வருகை தந்த  இந்த இராஜதந்திரிகள் தூதுக்குழுவிற்கு பலஸ்தீன் தூதுவரும் கொழும்பிலுள்ள இராஜந்திரிகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி அன்வர் அல் அகா தலைமை தாங்கினார்.

இவர்களுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 (மன்னார் நிருபர் s.vinoth)
மன்னாருக்கு இராஜந்திரிகள் குழு விஜயம். பட இணைப்பு Reviewed by NEWMANNAR on March 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.