இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21000 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.
புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21000 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

1 comment:
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற நிலை வரும்போதெல்லாம்தான் இதுமாதிரியான சமூக அக்கறை கொண்ட விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து கொள்ளை அடி;ப்பவர்கள் ஏன் இதனை அறுவது வருடங்களுக்கு முன்பே சிந்தித்து செயற்பட்டிருக்கலாமே?
கடந்த வருடம் மார்ச் மாதம் வந்த போதும் இவ்வாறானதொரு புள்ளிவிபரத்தை முதுகெலும்பற்றவர்கள் உரிமை கோராமல் வெளியிட்டிருந்தார்கள்.
சிகரட்டினால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவிற்கும் பெரும் தொகை பணம் செல்வதாக கவலைப்படுபவர்கள் ஏன் தமது வங்கிக்கணக்குகள் நிரம்புவது பற்றி பேசுவதில்லை.
கடந்த 60 வருடங்களில் 1,80000 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட 1,40000 பேரையும் இதனுள் உள்ளடக்கிவிட்டார்கள் போல் தெரிகிறது.
Post a Comment