கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டி - 2012ல் தலைமன்னார் பியர் கிராம அலுவருக்கு 2ம் இடம்
கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டி - 2012
அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் 2011, 2012ம் வருடங்களுக்காக நடாத்தப்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டியில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவினுள் இரண்டாம் இடத்தினை தலைமன்னார் பியர் மேற்கு பிரிவில் பணியாற்றி வரும் கிராம அலுவலர் ஜனாப். M.I. அப்துல் ரவூப் அவர்கள் பெற்றுள்ளார்கள் .
தலைமன்னார் பியரானது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களைக் கொண்ட மன்னாரிலுள்ள ஒரு சிற்றூராகும். இங்கு தலைமன்னார் பியர் கிழக்கு, மேற்கு என்ற இரு கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
மன்னர் மூர் வீதியை வதிவிடமாக கொண்ட ஜனாப். M.I. அப்துல் ரவூப் அவர்கள் 2010ம் ஆண்டு தலைமன்னார் பியர் மேற்கு பிரிவிற்கு கிராம அலுவலராக பணியாற்ற வந்தார். அன்றிலிருந்து இன்று வரை தனது பணியை செம்மையாக புரிந்து வருகின்றார். மேலும் 2012ம் வருடம் தலைமன்னார் பியர் கிழக்கு பிரிவும் இவரது பணிப் பிரதேசமாக கையளிக்கப்பட்டது. மூன்று மதங்களைக் கொண்ட தலைமன்னார் பியர் பிரதேசத்தில் எதுவித மத, இன வேற்றுமைகளையும் பாராமல் தனது சேவையை செய்து வருகின்றார். இதனால் வருடந்தோறும் நடைபெறும் கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டியில் 2011,2012ம் வருடங்களுக்கான சிறந்த கிராம அலுவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்த இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவான் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டி - 2012ல் தலைமன்னார் பியர் கிராம அலுவருக்கு 2ம் இடம்
Reviewed by Admin
on
April 04, 2013
Rating:

No comments:
Post a Comment