அண்மைய செய்திகள்

recent
-

பௌத்தர்கள் ஏனைய மதத்தினரை மதிக்க வேண்டும்: ஜனாதிபதி


இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே சகல மதத்தினருக்கு தத்தமது மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருக்கின்றது. இதேவேளை பௌத்தர்கள், ஏனைய மதத்தினரை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 மாத்தறை வெஹெரஹேன ரஜ மஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இனம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாத்து பௌத்த மக்கள் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியானவர்களாக செயற்பட வேண்டும். இனவாதம் அல்லது மத தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது.

எங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. மாறாக உலகமே நம்மை அவதானித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்மாதிரியானவர்கள் இருக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.



பௌத்தர்கள் ஏனைய மதத்தினரை மதிக்க வேண்டும்: ஜனாதிபதி Reviewed by Admin on April 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.