அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரத்தில் வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தை நீக்க நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


 எனினும் கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்தில் வணிக பாடத்தை தெரிவு செய்ய உத்தேசித்த அல்லது தனியார் வகுப்புக்களில் இந்தப் பாடத்திற்காக செல்லும் மாணவ மாணவியர் இந்தத் தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தை தெரிவு செய்ய அனுமதியளிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் கொழும்பு மாவட்ட தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் கோரியிருந்தார்.

 பொருளியல், வணிகக் கல்வி மற்றும் கணக்கீடு ஆகிய பாடங்களையே மாணவர்கள் கற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 746 மாணவ மாணவியர் வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தை தெரிவு செய்திருந்தனர், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 912 ஆக உயர்வடைந்திருந்தது.

 மாணவர்களின் அடைவு  மட்டம் 2011ஆம் ஆண்டில் 41 வீதமாகவும், 2012ஆம் ஆண்டில் 61 வீதமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயர்தரத்தில் வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தை நீக்க நடவடிக்கை Reviewed by Admin on April 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.