இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தமிழர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.
இதில் ஒருவர் பொது நிலையிலும் ஒருவர் திட்டமிடல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாடத் துறைக்குத் தெரிவு செய்யப் பட்டவர்களில் 4 பேர் விஞ்ஞான பாடத்துக்கும், 2 பேர் கணித பாடத்துக்கும், 2 பேர் தகவல் தொழில்நுட்பம் பாடத்துக்கும், கீழைத்தேச சங்கீதம், விவசாயம், வர்த்தகம் ஆகிய பாடத்துறைகளுக்கு தலா ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட (திறந்தநிலை) போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இற்கு 104 பேரைத் தெரிவு செய்யத் தீர்மானிக் கப்பட்டிருந்த போதிலும் 43 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதில் 38 பேர் சிங்களவர், 5 பேர் தமிழர், முஸ்லிம் எவரும் இல்லை.
இரண்டாம் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கும் மே மாதம் 15 ஆம் திகதியில் இருந்து நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களின் பெயர் விவரம் இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தமிழர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.
Reviewed by Admin
on
April 30, 2013
Rating:

No comments:
Post a Comment