எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மன்னார் விஜயம்.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று இன்று(28-04-2013) மன்னாருக்கு வருகை தந்தனர்.
இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தன,ரவி கருநாநாயக்க,ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க , கொழும்பு மாநகர சபை முதல்வர் எம்.ஜே.எம்.முசம்மில், மேல்மாகாண சபையின் ஜக்கியதேசியக்கட்சி உறுப்பினர் முஜிதர் ரகுமான் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
இன்று காலை மன்னார் மூர்வீதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் முஸ்லிம் மத பிரமுகர்களையும் சந்தித்தனர். அதனைத்தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன் போது மீனவ சங்க பிரதிநிதிகள்,விவசாய அமைப்புக்கள்,மாதர்,கிராமச்சங்க பிரதிநிதிகள்,வர்த்தகர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள்,விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தினர். குறித்த நிகழ்வுகள் இரண்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் முஹமட் பஸ்மி தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
April 28, 2013
Rating:
No comments:
Post a Comment