ரணில் தலைமையிலான குழுவினர் மன்னார் ஆயரை சந்திப்பு
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று வருகை தந்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று மதியம் 1 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன் போது மன்னார் நகர சபை,மன்னார் பிஜைகள் குழு,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை,காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பு ஆகியவற்றின் பிரதி நிதிகளும்,காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது பல தரப்பட்ட விடயங்கள் ஆரயப்பட்ட நிலையில் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனதாக கூறப்படும் சுமார் 472 பேருடைய விபரங்கள் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் தலைவி எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
குறித்த சந்திப்பின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்டனி விக்டர் சோசை, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தன,ரவி கருநாநாயக்க,ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க , ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
April 28, 2013
Rating:
No comments:
Post a Comment