வன்னி எம்.பி.க்கள் தொகையில் மாற்றமில்லை
.jpg)
வன்னி மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆறிலிருந்து ஐந்தாகக் குறைவடையும் என வன்னி மற்றும் முல்லைத்தீவு பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி கடந்த வாரம் கூறியிருந்தார்.
வன்னியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை 219,196ஆக குறைந்துவிட்டதாக கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். இதனை மறுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, 'பிரதி ஆணையாளரான கருணாநிதிக்கு இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்க முடியாது' எனவும் குறிப்பிட்டார்.
'இது அவரது அதிகாரத்தை மீறிய விடயம். இது தொடர்பில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்' என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். 'ஒரு தொகுதியில் பதியப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகை தேர்தல்கள் திணைக்களம் தீர்மானிக்கும்.
அந்த வகையில் அண்மையில் பதுளை மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டது. நுவரெலியாவுக்கு ஓரிடம் அதிகரிக்கப்பட்டது' என்று தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறினார். </div>
வன்னி எம்.பி.க்கள் தொகையில் மாற்றமில்லை
Reviewed by Admin
on
April 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment