தலைமன்னாரில் பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்புச் சட்ட விளக்கக் கருத்தரங்கு
தலைமன்னார் பியர் கிராம அலுவலர் ஜனாப். M.Iஅப்துல் ரவூப் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இக்கருத்தரந்க்கிற் கு சட்ட விளக்க உரை வழங்குவதற்கு தலைமன்னார் பொலிஸ் தலைமைப்பீட பொலிஸ் பரிசோதகர் ஜனாப். A.L.M.ஜமீல் அவர்களும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும், மத குருமார்களும், தலைமன்னார் பியர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், மற்றும் தலைமன்னார் பியர் பொது மக்களும் பங்குபற்றினர்.
இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி தலைமன்னார் பியர் கிராம அலுவலர் விளக்கியவுடன் அடுத்ததாக தலைமன்னார் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் வண. சிவரூப சர்மா குருக்கள் அவர்கள் சிவில் பாதுகாப்பு குழு பற்றி சிறு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் தலைமைப்பீட பொலிஸ் பரிசோதகர் ஜனாப். A.L.M ஜமீல் அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் பின்வருமாறு கூறினார்.
சென்ற காலங்களில் எமது பிரதேச மக்கள் சிவில் சட்ட நடவடிக்கைகளில் போதிய விளக்கமில்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது சிவில் பாதுகாப்புக் குழுவினால் மாதம் தோறும் நடாத்தப்படும் இக்கருத்தரங்கின் மூலம் ஓரளவு சட்ட அறிவைப் பெற்றுள்ளனர்.
மேலும் அவர் 1.பணம் கொடுக்கல் வாங்கல்,
2.சீட்டு பிடித்தல்,
3.உறுதிகளை அடமானம் வைத்து பணம் பெறல், 4.வட்டிக்கு பணம் கொடுத்தல்,
5.குடும்ப வன்முறைகள்,
6.போதைப் பொருள் பாவனை ஆகியன தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
அதுமட்டுமல்லாது சிவில் குற்றங்களுக்கு எதிராக கிராம அலுவலர் எனென்ன நடவடிக்கைகள் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரமுடையவர் என்பதை எடுத்துக்கூறினார். பொது மக்களும் பொலிஸாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தலைமன்னாரில் பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்புச் சட்ட விளக்கக் கருத்தரங்கு
Reviewed by Admin
on
April 06, 2013
Rating:

No comments:
Post a Comment