மன்னார்-தாழ்வுபாடு வீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பார ஊர்தி தீப்பற்றியது-ஒருவர் காயம்.படங்கள்
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை அரச போக்குவரத்துச் சேவை டிப்போவிற்கு அருகாமையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம் பற்ற தீ விபத்தில் ஒருவர் காணமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை அரச போக்குவரத்துச் சேவை டிப்போவிற்கு அருகாமையில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி தெரு மின் கம்பங்களை வாகனம் ஒன்றில் ஏற்றும் பணியில் வவுனியா மின்சார சபையைச் சேர்ந்த இருவர் ஈடுபட்டு வந்தனர்.
-பாரஊர்தியுடன் பெக்கோவின் இணைப்புக்கள் பொருத்தப்பட்ட நிலையில் குறித்த மின்; கம்பங்கள் பார ஊர்த்தியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த சமயம் பெக்கோவின் மேற்பகுதி மேலே காணப்பட்ட அதியுயர் மின் கம்பிகளுடன் முட்டியுள்ளது.
-இதன் போது குறித்த பார ஊர்தியில் மின் பரவி உடனே பாரஊர்தி எரிய ஆரம்பித்தது. இதன் போது சாரதியாக செயற்பட்டவர் மின்தாக்குதலுக்கு இலக்காகி நீண்ட போராட்டத்தின் மத்தியில் காப்பாற்றப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவருடன் கடமையாற்றிய சக பணியாளர் ஒருவர் தெரிவித்ததார்.பார ஊர்தியின் முக்கிய பாகங்கள் எரிந்து சாம்பளாகியுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-தாழ்வுபாடு வீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பார ஊர்தி தீப்பற்றியது-ஒருவர் காயம்.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2013
Rating:
No comments:
Post a Comment