அண்மைய செய்திகள்

recent
-

அச்சுவாகனம் ஏறிய முதல் தமிழ் நுல்களை தேடிக்கண்டுபிடித்து வெளிப்படுத்தியவர் தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆவண மாநாட்டில் அருட்திரு தமிழ் நேசன்


மிழில் அச்சேறிய முதல் நூல்கள் சுமார் 400 ஆண்டுகளாக மறைந்து கிடந்த சூழ்நிலையில் தனிநாயகம் அடிகளார் அவற்றைத் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.  ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச்
சென்றபோதெல்லாம் அந்நாடுகளில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இத்தமிழ் நூல்களைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டார். அம்முயற்சியில் அவர் வெற்றிபெற்று மறைந்து கிடந்த பல நூல்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவருடைய இந்த முயற்சி தமிழாய்வுத் தளத்தில் மிக முக்கியமான பங்களிப்பாகும் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.



  கடந்த (ஏப்ரல்) 27ஆம் 28ஆம் திகதிகளில் நூலக நிறுவனத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட தமிழ் ஆவண மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

  கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்ற 'தமிழ் மொழியும் இலக்கியமும்' என்ற அரங்கில் 'தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உiயாற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். இந்த அரங்கில் உரையாற்றிய அடிகளார் தொடர்ந்து கூறியதாவது,

  பதினாறாம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த மேனாட்டு கிறிஸ்தவ அறிஞர் சிலர் இயற்றிய நூல்கள் கால வெள்ளத்தில் காணாமல்போய்வி;ட்டன. மறைந்துகிடந்த இத்தமிழ் நூல்களை வெளிநாட்டு நூலகங்களில் தனிநாயகம் அடிகளார் தேடிக் கண்டுபிடித்தார். அவர் இந்த முயற்சியில் ஈடுபடவில்லையென்றால் இவ்வரிய நூல்களைத் தமிழுலகம் இழந்திருக்கக்;கூடும்.

 முதன் முதலில் ஐரோப்பியர் ஒருவரால் தமிழ்த்துறையில் எழுதப்பெற்ற நூலாகக் கருதப்படும் 'தமிழ் மொழி இலக்கணக் கலை' என்ற கையெழுத்துப்பிரதி (1550ஆம் ஆண்டு), உலகளாவிய ரீதியில் முதன் முதலில் தமிழ் மொழியில் அச்சேறிய நூலாகக் கருதப்படும் 'கார்த்தில்லா' (1554ஆம் ஆண்டு),  முதன் முதலில் இந்தியாவில் அச்சேறிய தமிழ் நூல்களாகக் கருதப்படும் 'தம்பிரான் வணக்கம்' (1578ஆம் ஆண்டு) மற்றும் 'கிரித்தியானி வணக்கம்' (1579ஆம் ஆண்டு), முதன் முதலில் தமிழ் நாட்டில் அச்சேறிய தமிழ் நூலாகக் கருதப்படும் 'வுளஸ் சங்ரோறும்' (1586ஆம் ஆண்டு) போன்ற வரலாற்று முக்கியத்துவம் நூல்களையே தனிநாயகம் அடிகளார் தனது தமிழ்;த்தூதுப் பயணங்களின்போது வெளிநாட்டு நூலகங்களில் கண்டுபிடித்தார்.

  பதினாறாம் நூற்றாண்டின் தமிழ் நடை, அச்சுக்கலை, மேனாட்டு தமிழ் அறிஞர்களின் அரிய முயற்சிகள் போன்றவை பற்றிய பல உண்மைகளை தமிழுலகம் உணர தனிநாயகம் அடிகளாரின் இம்முயற்சி பேருதவியாக அமைந்தது என தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

படங்கள்

தமிழ் நேசன் அடிகளார் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றுகின்றார்.
தமிழ்ப்பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் தலைமை உரையாற்றுகின்றார்.
ஆய்வாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.








அச்சுவாகனம் ஏறிய முதல் தமிழ் நுல்களை தேடிக்கண்டுபிடித்து வெளிப்படுத்தியவர் தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆவண மாநாட்டில் அருட்திரு தமிழ் நேசன் Reviewed by NEWMANNAR on April 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.