அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வலிகாமம் வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6400 ஏக்கர் காணிகள் உட்பட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.


 வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு எதிரில் இன்று காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன் சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் மக்கள் தேசிய முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் பாஸ்கரா உட்பட வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் Reviewed by Admin on April 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.