வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்காக 214 பில்லியன் ரூபா
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் துரித அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன, அனைத்து துறையிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்ற அதேவேளை தேசிய மாகாண கிராமிய மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீதி அபிவிருத்திப்பணிகள் விருத்தி செய்யப்பட்டன.
இதனடிப்படையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம்,ருஹுனு மாகம்பர துறைமுகம்,கொழும்பு கட்டுநாயக்க பாதை,தெற்கு துரித பாதை கொழும்பு துறைமுக விரிவாக்கல் போன்றவை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுனர் திரு.அஜித் நிவாட் கப்ராலினால் நேற்று(ஏப் 09)ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவத்திலே ஜனாதிபதியவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயம்,மீன்பிடி,சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் போன்ற துறையில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீடு,குடி நீர்,மின்சாரம்,பாடசாலை,சுகாதாரம்,கல்வி போன்ற துறைகளில் மாகாண மட்டத்தில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியவர்கள் சுட்டிக்காட்டினார்
மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை இல்லா தொழித்த அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் சிறந்த முறையில் பேனக்கூடியதாகவிருந்தது கிராமத்துக்கும் நகரத்துக்கும் வேறுபாடு இல்லாத வகையில் கிராமங்களின் வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்தார் இந்நிகழ்வில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபல புத்தி ஜீவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்காக 214 பில்லியன் ரூபா
Reviewed by Admin
on
April 12, 2013
Rating:

No comments:
Post a Comment