தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களும் விடுதலை{படங்கள் }
தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் மன்னார் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தீன் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்தார்.
துலைமன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜா படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த 19 மீனவர்களும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் மாவட்ட பதில் நீதவான் எம்.எம். சபூர்தீன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த 19 மீனவர்களையும் பதில் நீதவான் விடுதலை செய்ததோடு அவர்களுடைய 4 டோலர் படகுகளையும் மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா ஆஜராகியிருந்தார்.
-குறித்த மீனவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடற்படையினரினுடாக கடல் மார்க்கமாக இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோறின் பணிப்புரைக்கு அமைவாக நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான பி.ராஜதுரை,மத்திய மாகானசபை உறுப்பினர்களான எம்.ராம்,எம்.ரமேஸ்,ஜனாதிபதியி ன் நுவரேலியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிர்வாக செயலாளர் வீ.ஜீவாநந்தம் ஆகியோர் மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்து மீனவர்களை பார்வையிட்டதோடு அவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்காண நடவடிக்கைகளையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்
தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களும் விடுதலை{படங்கள் }
Reviewed by NEWMANNAR
on
April 12, 2013
Rating:
No comments:
Post a Comment