அண்மைய செய்திகள்

recent
-

“2014ல் இலங்கையின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சியடையும்”

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த பொருளாதார நிலைப்பாடு பற்றிய ஆசிய அபிவிருத்தி அவுட்லுக் 2013 சஞ்சிகையில் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 6.8சதவீதமாகவும் 2014ல் 7.2 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்ற மகிழ்ச்சிக்குரிய ஆதாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.


 2012ல் கைத்தொழில்துறை இரண்டு மடங்கு வளர்ச்சியடைந்து 10.3 சதவீதமாக உயர்ந்திருந்தது. அதைவிட நிர்மாணத்துறையின் வளர்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. இலங்கையில் வறட்சி காரணமாக விவசாயத்துறை மந்த நிலையில் இருந்த போதிலும், இவ்விதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பது பாராட்டக்கூடிய விடயமென்றும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நேரடியான முதலீடு 2012ம் ஆண்டில் 2011ம் ஆண்டில் இருந்ததைப் போன்று ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கில் ஸ்திரமாக இருந்து வருகின்றது.

 2013ல் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி சற்று மந்தமாக 4 சதவீதமாகவே வளர்ச்சியடைந்துள்ள போதிலும், 2014ல் அது 10 சதவீதமாக உயரும் என்றும் இந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது. 2012ல் இலங்கையின் பணவீக்கம் 7.6சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“2014ல் இலங்கையின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சியடையும்” Reviewed by NEWMANNAR on April 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.