அண்மைய செய்திகள்

recent
-

யாழ் சிறார் காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் ?

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள இரட்சணிய சேனை சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பில் சிறுமியொருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இல்லத்தில் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகள் நேற்று அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனயைடுத்து, காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து 7 சிறுமிகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சிறுமிகள் மருத்துவ பரிசோதனையின் பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கமைய வேறு ஒரு சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

எனினும், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை கூற அவர் மறுத்துவிட்டார். கைதடி இரட்சணிய சேனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உடல், உள வளர்ச்சி குன்றிய மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட 18 சிறுமிகள் சிறுவர் நலன் பேணும் அதிகாரிகளின் ஏற்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி ஒருவர் மீது குற்றமிழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது எந்த அளவிற்கு உண்மையானது என்பதை அது தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் கூற முடியாது என்று சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் உமா தங்கவேல் தெரிவித்தார்.

இந்த இல்லத்தைச் சேர்ந்த சிறுமியர்கள் இப்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ் சிறார் காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் ? Reviewed by NEWMANNAR on April 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.