அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம்களின் காணிகள் தமிழரால் பறிப்பு: ரிஷாத்; முள்ளியவளை ஆர்ப்பாட்டம் அவருக்கு எதிரானதல்லவாம்

முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தமிழ் மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். அதனாலேயே முஸ்லிம்களுக்கு அரசு புதிய காணிகளை வழங்குகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 முள்ளியவளையில் ஏப்ரல் ஆறாம் திகதி மக்கள் நடத்திய போராட்டம் தனக்கு எதிரானது அல்ல என்று அமைச்சர் ரிஷாத் தனது சட்டத் தரணி ஊடாக விளக்கம் அளித்துள்ளார். "அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முள்ளயவளையில் காணி பகிர்ந்தளிப்புத் தொடர்பான எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்வோ கூட்டத்திலோ பங்குபற்றவோ இல்லை.

 அங்கு வருகை தரவும் இல்லை. அதேபோன்று முள்ளியவளையில் அமைச்சருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏதும் ஏற்படவில்லை. அமைச்சர் பொதுமக்களின் எதிர்ப் புக்கு மத்தியில் வெளியேறிச் செல்லவும் இல்லை'' என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களுக்கு காணிகள் எவையும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். "அத்தகைய தகவல்கள் முற்றிலும் பிழையானவை.

பிரதேச செயலரின் தெரிவு நடைமுறைப்படியே பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு எதிராகத் தமிழ் மக்களைத் தூண்டிவிட்டு விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற நினைக்கும் சக்திகளின் செயற்பாடு மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் காணிகள் தமிழரால் பறிப்பு: ரிஷாத்; முள்ளியவளை ஆர்ப்பாட்டம் அவருக்கு எதிரானதல்லவாம் Reviewed by Admin on April 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.