அண்மைய செய்திகள்

recent
-

சுய விருப்பு வெறுப்பின் பேரில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; தேசிய இடமாற்றக் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்று விசனம்

வடக்கு மாகாணப் பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றத்தில் தேசிய இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் கடைப்பிடிக்காமல் அதிகாரிகள் சுய விருப்பு வெறுப்புக்கு இடம்கொடுத்தும், அரசியல் தலையீட்டுடனும் நடைமுறைப்படுத்துவதால் மாணவர்களில் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.


 அத்துடன் ஆசிரியர்களும் உளரீதியாகப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகத்தினர் ஆகியோரின் கவனத்துக்கு தரம் பெற்ற அதிபர்கள் சேவைச் சங்கம் கொண்டு வந்திருக்கின்றது என்று தரம் பெற்ற அதிபர்கள் சேவைச் சங்கத்தின் தலைவர் ஏ.சீ.எம். ஜவகர்ஷா தெரிவித்தார்.

 இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

 வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் அண்மைக் காலத்தில் பெரும் சீர்குலைவுக்கு உள்ளாகி உள்ளது. கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலை மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தில் எதிரொலிப்பதைக் கண்டு கொள்ள முடிகின்றது. யாழ். கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் 55 வயது பூர்த்தியடைந்த ஆசிரியைக்கு இயல்பு நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்கள் என்ற வகைப்பாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட சிலர் சில மாத காலத்தில் மீண்டும் அதே பாடசாலைக்கு மீள இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர். ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக மேன்முறையீடு செய்திருந்தாலும் குறித்த தினத்தில் பாடசாலையை விட்டு வெளியேறி விட வேண்டும். இவை தேசிய இடமாற்றக் கொள்கைக்கு முரணானது மட்டுமல்ல அடிப்படை மனித உரிமைக்கும் மாறுபட்டது.

 கல்வி அமைச்சு வெளியிட்ட தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பான 2007 1213 ஆம் திகதிய 2007/20 ஆம் இலக்க சுற்றறிக்கையில், பிரிவு 3:4 இல் 55 வயது பூர்த்தியடைந்த ஆசிரியர்களுக்கு இயல்பு நிலையில் அவர்களின் சம்மதம் இன்றி இடமாற்றம் வழங்க முடியாது. பிரிவு 3:4 (6) இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர் மேன்முறையீடு செய்யும் போது மேல்முறையீட்டுக்கான பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து அதே பாடசாலையில் கடமையாற்றலாம்.

 மேன்முறையீட்டுக்கான பதில் ஒரு மாதத்துக்கு மேற்படாத காலத்துக்குள்ளே உரிய முறையில் ஆசிரியருக்கு கையளிக் கப்பட வேண்டும். இடமாற்றம் பெறும் ஆசிரியர் அதிகஷ்டப் பிரதேச மற்றும் கஷ்டப் பிரதேசப் பாடசாலையில் 3 வருடங்களுக்கு குறையாத காலம் கடமையாற்ற வேண்டும். வசதியில்லாத பாடசாலையாயின் 4 வருடங்களுக்குக் குறையாத காலம் கடமையாற்ற வேண்டும். வசதியான பாடசாலையாயின் ஆகக்கூடிய 8 வருடங்களுக்கு மேற்படாமலும் அதிவசதியான பாடசாலையாயின் 6 வருடங்களுக்கு மேற்படாமலும் கடமையாற்ற வேண்டும்.

 இவ்வாறான விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்
சுய விருப்பு வெறுப்பின் பேரில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; தேசிய இடமாற்றக் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்று விசனம் Reviewed by NEWMANNAR on April 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.