தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)வின் மத்திய குழு கூட்டம் திருமலையில்.
தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)வின் மத்திய குழு கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)வின் தலைமைக்காரியாலையத்தி இடம் பெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் 8 ஆவது தேசிய மாநாட்டை தொடர்ந்து முதலாவது தடவையாக மத்திய குழு கூடுகின்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நடவடிக்கைகள்,தற்கால செயற்பாடுகள்,தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக ஆரயப்படவுள்ளதோடு குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கும் அதன் உயர் பீடத்தை நிறுவுவது தொடர்பாகவும்,மாவட்ட ரீதியாக கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும், கடந்த காலங்களில் இலங்கைத்தமிழரசுக்கட்சியுடனும்,தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளுடனும் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சம்மந்தமாக இந்த மத்தியக்குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு இது தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment